இந்நூல் இஸ்லாமியப் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது. உலக முன்னேற்றத்திற்கு இஸ்லாம் வழங்கியுள்ள இணையற்ற கலாச்சாரப் பயன்களை இனிய முறையில் எடுத்துரைக்கிறது.
1. இஸ்லாமியக் கலைப் பண்பு
2. வெற்றி தோல்வியின் காரணங்கள்
3. சகோதரத்துவம்
4. விஞ்ஞானமும் கலையும்
5. சகிப்புத் தன்மை
6. விதிவச நம்பிக்கைக் குற்றச்சாட்டு
7. ஆண் – பெண் உறவு நிலை
8. இஸ்லாத்தின நகரம்
ஆகிய எட்டுத் தலைப்புகளில் மர்மடியூக் பிஃக்தால் 1927ல் சென்னையில் ஆங்கிலத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தமிழாக்கம்தான் இந்நூல். இவர் பத்திரிகை ஆசிரியராகவும்¸ பன்னூல் ஆசிரியராகவும் பரிணமித்திருந்தார். பல வெளிநாடுகளுக்குச் சென்று இஸ்லாம் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். கனிந்த அனுபவமும்¸ முதிர்ந்த ஞானமும் பெற்றவராகத் திகழ்ந்தார். திருக்குர் ஆனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
இந்நூலைத் தமிழில் மொழி பெயர்த்த பெருமை ஆர்.பி.எம்.கனி அவர்களைச் சாரும்.
Reviews
There are no reviews yet.