சத்தியத்திற்காகப் போராடி¸ சன்மார்க்க நெறிகளைப் பேணிக் காத்த மகாத்மாக்களான இமாம் அபூ ஹனிபா¸ இமாம் ஷாபிஈ¸ இமாம் மாலிக்¸ இமாம் ஹன்பலி ஆகிய நால்வரின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாறுகளைச் சுவைபட விவரிக்கிறது இந்நூல்.
நீதியை நிலைநாட்டுவதற்காக ஆட்சியாளர்களோடு அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டங்களையும்¸ பிக்ஹு எனும் இஸ்லாமிய மார்க்கச் சட்டம் இயற்றி வளர்ந்த வரலாற்றையும்¸ இந்த இமாம்கள் உருவாக்கித் தந்த மத்ஹபுகள் பற்றிய விவரங்களையும்¸ அவர்களின் மதிநுட்பத்தைக் காட்டும் அரிய நிகழ்வுகளையும் அவர்கள் வழங்கிய அதியற்புதமான மார்க்கத் தீர்ப்புகளையும்¸ அவர்களைப் பற்றிய நபி பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளையும்¸ சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த எந்த முஸ்லிமும்¸ அவர்கள் வகுத்துள்ள மத்ஹபுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்பதன் அவசியத்தையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
Reviews
There are no reviews yet.