பூமிப்பந்தின் அடுக்குகளில் இருக்கும் நிலத்தடி நீர் என்பது அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி என்று கூறமுடியாது.
பல்லாயிரம் ஆண்டுகளாக பூமிப்பந்தில் சேமித்து வைக்கப்பட்ட நீரை மனிதர்கள் சில நூறு ஆண்டுகளிலேயே வெளியே எடுத்து பயன் படுத்தி விட்டனர்.
தண்ணீர் என்பது தேடி அலையும் பொருளாகிவிட்டது. கடல் நீர் உப்புக் கரிக்கிறது என்ற காரணத்தினால் மட்டுமே அதனை தவிர்த்து வந்துவிட்டோம்.
நதிகள் தேசியமயம் ஆக்கப்படவேண்டும் நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் நதிநீர் இணைப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்ற பதம் எல்லோரும் கூர்ந்து ஆராயத் தக்கது இறந்துகொண்டிருக்கும் நதிகளை மீட்க நதிக்கரை ஓரங்களில் மரம் நட சொல்கிறார்கள் இயற்கை ஈடுபாட்டாளர்கள். வளர்ந்த நாடுகள் அனைத்தும் தண்ணீரின் மகத்துவம் உணர்ந்து அதனை மிக மிகப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கின்றன.
நிலமும் கெடக் கூடாது. நீர் சார்ந்த விஷயங்களும் நம்மை அச்சுறுத்தக் கூடாது என்பதில் நமக்கு அக்கறையும் புரிதலும் அவசியம்.
இத்தகைய சமூக அக்கறை நோக்கத்தை எல்லா தரப்பினரிடமும் கொண்டுசெல்லும் முயற்சியாகவே இந்நூலைச் சிறப்பாக வெளிவந் திருக்கிறது.
Reviews
There are no reviews yet.