“நான் டேராடூன் சிறையில் இருந்தபோது சலீம் அலியின் “இந்தியப் பறவைகள்” என்ற புத்தகத்தப் படித்த பிறகுதான் பறவைகளைப் பற்றிய புதிய செய்திகளை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்றார் நேரு.
“ நான் நைனிடால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உயரமான சுவர் மீது உட்கார்ந்திருந்த ஒரு பறவையின் குரல் இனிய பாடல் போல் இருந்தது. அந்தப் பறவையின் படத்தைச் சலீம் அலி அவர்கள் எனக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பிய புத்தகத்தில் பார்த்தபோது பரவசம் அடைந்தேன்” என்று இந்திரா காந்தி கூறினார்.
பறவைகள் மீதான ஆர்ப்பரிக்கும் காதல் கொண்ட இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி, மனித குலத்தின் மகத்தான உயிர்ப்பறவை என்று கைகூப்பி வணங்கலாம்.
இந்திய அரசாங்கத்தின் சூழ்நிலை இயல் அமைச்சகத்தை ஏற்படுத்தி நாடெங்கும் நமது சுற்றுச்சூழலை சிறந்த முறையில் பராமரிக்க, டாக்டர் சலீம் அலியின் முனைப்பே உந்து சக்தியாக இருந்திருக்கிறது என்ற வியப்பூட்டும் செய்தியை அறியும்போது, இந்தியப் பறவை மனிதர் நமது பார்வையில் இன்னும் உயரப் பறக்கிறார்.
Reviews
There are no reviews yet.