“தமிழ்க் கவிதைக்குப்
புதிய தரிசனங்களைத் தந்து வருகிற
இந்த அபூர்வ சிருஷ்டிகர்த்தாவிடமிருந்து
எதிர்பாராத ஒரு பொக்கிஷம்
நமக்குக் கிடைத்திருக்கிறது.
இலக்கியத்தின் விலாசங்களையும்
வாழ்க்கையின் அகல நீளங்களையும்
அளந்து சொல்லும் கட்டுரைகளாக…
கலீல் ஜிப்ரானுடைய மந்திரச் சொல் மயக்கமும்
ஆஸ்கார் ஒயில்டினுடைய
சம எடைத் தராசு முள் வாக்கிய அமைப்பும்
இவர் நடையழைகாய் நிமிர்கின்றன.
நம்மைச் சுற்றிலும், உலகிலும் கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சங்களைக் காணப் பொழுதில்லா நமக்கு
ரகுமான் திறந்து வைத்துள்ள சாளரங்கள்
வெளி உலகைப் பார்க்கும் கண்களாய் இல்லை,
நம்மீது சுகந்தம் இறைக்கும்
புதிய காற்றாய் ததும்புகின்றன.”
இவ்வாறு கவிஞர் சிற்பி அவர்கள் தனது அணிந்துரையில் கூறியுள்ளார்.
Reviews
There are no reviews yet.