கவினுறு பாரசீக மொழிதனில் அழியா நூல் பல செய்தவராவார் மகான் ஷைகு சஅதி. அவரின் “குலிஸ்தான், போஸ்தான்” எனும் இரு நூல்களும் அமிழ்தத் தமிழில் ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் “கரீமா” என்னும் இச்சிறு நூல் இதுவரை வெளிவரவில்லை. அது ஒரு குறையெனக் கொண்டு, அதனைத் தீந்தமிழில் கொணர விரும்பினோம். அவ்விருப்பே இந்நூலாய் விரிந்திருக்கிறது. நூலின் மெல்லிதழ் புரட்டி உளம் பதித்தால் அங்கிருந்து எழும் நறுமணம் நம் ஆன்மாவிற்கும் அறிவிற்கும் அரிய விருந்தளிக்கும் என்பதில் ஐயமில்லை.
சிறிய நூலாயினும் சிறந்த நூலான இதனைப் பாரசீக மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து உதவிய நண்பர்கள் அல்ஹாஜ் மௌலவி அப்துஸ் ஸமத் (நத்வி) அவர்களுக்கும், எம். செய்யிது முஹம்மது அவர்களுக்கும் எமது நன்றி உரித்தாகுக!
இத்துடன் சேர்க்கபட்டிருக்கும் அரபிப் பழமொழிகள் வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும் என நம்புகிறோம். இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.