அமெரிக்காவின் அதிபராக இருந்த ஐஸன் ஹோவர் பற்றி அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரைப் பற்றிய அறிய செய்திகளையும் மிக அழகாக அப்துற் – றஹீம் அவர்கள் இந்நூலில் தந்திருக்கிறார்.
இந்நூலைப் படித்த முகம் தெரியாத நண்பர் ஒருவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமெரிக்காவில் ஜனாதிபதியாக வீற்றிருந்த ஐஸன் ஹோவர் அவர்களுக்கு அனுப்பியிருந்தார்.
அதைப் படித்த ஐஸன் ஹோவர் அவர்கள் நம்மைப் பற்றி இவ்வளவு அருமையாக இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள சென்னையில் உள்ள ஒரு தமிழர் எழுதியிருக்கிறாரே. அவரைப் பாராட்ட வேண்டும் என்று எண்ணி அப்துற் – றஹீம் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார்.
அக்கடிதத்தில் என்னைப் பற்றி மிகச் சிறப்பாக எழுதிய தங்களைப் பாராட்ட வேண்டும். ஆகவே அமெரிக்கா வந்து என்னுடைய மாளிகையில் எனது விருந்தினராக தங்கி எனது பாராட்டைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எழுதியிருக்கிறார். அப்துற் – றஹீம் அவர்களோ நான் அமெரிக்கா வந்து சென்னை திரும்பும் காலத்தில் ஒரு நூல் எழுதிவிடுவேன். ஆகவே வர இயலாமைக்கு வருந்துகிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பைச் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டார்.
ஐஸன் ஹோவர் இவரை விடுவதாக இல்லை. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அழைத்து தமது பாராட்டையும், மகிழ்வையும் அமெரிக்க தூதர் மூலம் அப்துற் – றஹீம் அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.
இந்நூல் 1954 – ம் ஆண்டு வெளிவந்த இந்நூலை மீண்டும் தமிழ்மக்களுக்கு வழங்குகின்றோம்.
எஸ். எஸ். ஷாஜஹான்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Reviews
There are no reviews yet.