ஜீவபாரதி இந்நூலில் ஒரு புதுவகையான உத்தியைக் கையாண்டுள்ளார். அப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியமாயுள்ள
1. வாழ்க்கையில் வெற்றி
2. கவலைப்படாதே!
3. முன்னேறுவது எப்படி?
4. சுபிட்சமாய் வாழ்க!
5. வியாபாரம் செய்வது எப்படி?
6. வாழ்வைத் துவங்கு
7. வாழ்வது ஒரு கலை
8. வழிகாட்டும் ஒளி விளக்கு
9. மகனே கேள்
10. அன்புள்ள தம்பி
11. எண்ணமே வாழ்வு
12. வாழ்வின் வழித்துணை
13. வழுக்கலில் ஊன்றுகோல்
14. வாழ்வின் ஒளிப்பாதை
15. மன ஒருமை வெற்றியின் இரகசியம்
16. அகிலத்தின் அறிவுத் திறள்
17. இல்லறம்
18. விளக்கேற்றும் விளக்கு
19. இளமையும் கடமையும்
20. உன்னை வெல்க!
21. படியுங்கள்! சிரியுங்கள்!!
22. படியுங்கள்! சிந்தியுங்கள்!!
23. படியுங்கள்! சுவையுங்கள்!!
24. ஒழுக்கம் பேணுவீர்
25. விடாமுயற்சி வெற்றிக்கு வழி
26. நினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி
27. அன்பு வாழ்வோ! அருள் வாழ்வோ!!
ஆகிய 27 நூல்களையும் திறனாய்வு செய்து¸ ஒரு நூலுக்கு ஒரு கட்டுரையாக இந்நூலை எழுதியுள்ளார்.
அப்துற்-றஹீம் எழுத்தோ சிறப்புடையது; படிக்கத் தூண்டுவது. ஜீவபாரதி அறிமுகப்படுத்துவதோ அதை மேலும் படிக்கத் தூண்டும் வகையில் அமைகிறது.
தனித்தன்மையின் உயர்வை அறிந்த ஜீவபாரதி செய்துள்ள இத்திறனாய்வு உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்தது என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கு இடமிருக்க வாய்ப்பே இல்லை.
என்று முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் கே.ஜீவபாரதி அவர்கள் எழுதிய “அப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு” என்ற இந்நூலைப் பற்றி தனது அணிந்துரையில் கூறியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.