“நீ பழக்க வழக்கங்கள் என்ற சங்கிலியால் உன்னைப் பிணைத்துக் கொண்டுள்ளாய். அவை உன்னுடைய நம்பிக்கைகளையெல்லாம் முறியடித்து¸ உன்னுடைய ஆசைகளையெல்லாம் அழித்தொழித்து உன்னை முடமாக்கிவிட்டன. சிலந்தியின் வலைபோன்று மென்மையாக இருந்த அவை இப்பொழுது இரும்புச்சங்கிலியை விட வன்மையாகிவிட்டதை உணர்கின்றாய். அவற்றை உடைத்தெறிந்து அளிப்பதற்காகவே உன்னை அழைக்கின்றேன்.
அச்சத்தின் காரணமாக நீ அமைதி இழந்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உண்மையில்¸ அச்சம் உன்னை அடிமை கொண்டு விட்டதென்றே கூறலாம். மாமனிதனாக வாழ வேண்டிய உன்னை அது ஒரு போலி மனிதனாக ஆக்கிவிட்டது. பயந்து பயந்து நீ சாகின்றாய். செத்துச் செத்து நீ ஒவ்வொரு நாளும் பிழைத்துக் கொண்டிருக்கிறாய். இதுவும் ஒரு வாழ்க்கையா? உன்னுடைய அச்சங்களையெல்லாம் நான் நீக்கி விடுகிறேன். இறப்பு பயம்¸ நோய் பயம் ஆகிய எல்லா விதமான பயங்களையும் உன்னை விட்டு விரட்டியடித்துவிடுகிறேன். உன்னை ஒரு புது மனிதனாக ஆக்கி விடுகின்றேன்” என்கிறார் இந்நூலின் ஆசிரியர் அப்துற்-றஹீம்.
Reviews
There are no reviews yet.