Skip to content

வாழ்வியல் பேசும் சூஃபி கதைகள்

130.00

ஆசிரியர் :சி.எஸ்.தேவநாதன்

ஒவ்வொரு கதையும் ஒரு விதைதான். விதைக்குள் மரம்போல கதைக்குள் மகத்தான செய்தி!

சூபிகள் அதிகம் பேசுவதில்லை. அர்த்தமுள்ள சொற்களை அளவாகப் பயன்படுத்துவார்கள்.  அவர்கள் கதை சொன்னாலும் துணுக்கு போலத்தான் இருக்கும். அவர்களுடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கதை!

சூஃபி கதைகளின் சிறப்பு நாம் படிக்கிற ஒவ்வொரு முறையும் புதுப்புது அர்த்தங்களை நமக்குப் புலப்படுத்திக் கொண்டே இருப்பதுதான்.

ஒரு கதை நடைமுறை வாழ்வின் சிக்கலிலிருந்து நம்மை விடுவிக்கும் என்றால், இன்னொன்று ஆன்மா சார்ந்த வகையில் நம்மை வழிநடத்தும் இப்படிப் பல வண்ணம் காட்டும் முப்பட்டைக் கண்ணாடிகளாய் இந்தக் கதைகள்!

இந்நூலைப் படித்து முடிக்கிற போது ஒரு மேம்பட்ட உணர்வை நீங்கள் அடைவீர்கள் என்பது நிச்சயம் உங்கள் வளர்ச்சிப்பாதையில் அடுத்த நகர்வுகளுக்கு அது உதவும் என்றும் கட்டாயம் நம்பலாம்.