Skip to content

வங்கத்தின் சிங்கப் பெண்மணி மம்தா பேனர்ஜி

150.00

ஆசிரியர் :ஜெகதா

“மம்தா… அதிரும் கொல்கத்தா” என்பது நேற்று.

“மம்தா… நாளைய பாரத மாதா” என்ற கோஷம் இன்று.

 

மேற்கு வங்காளத்தில் அதற்கான வேள்வித்தீயின் நாக்குகள். பாரதம் முழுவதும் ஊழிப் பெருந்தீயான பரவத் தொடங்கியுள்ளது. இந்திய தேசிய அரசியலில் களம் இன்று ஒரு மூர்க்கமான எதிர்ப்பு முகத்தை பெருந்தவிப்போடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

பாம்பு தின்னும் ஊரில் “படமெடுக்கும் தலை எனக்கு” என்று முன்கை நீட்டும் முரட்டுக் கொம்மையுடைய ஆளுமையின் தேவை தவிர்க்க முடியாததாகி விட்டது.

 

கூண்டுக்குள்ளும் புறமும் உறுமலும் பாய்ச்சலுமாக, அதிரடி சரவெடி அரசியல் பயிற்சி பெற்ற மேற்கு வங்கப் பெண்புலியாக கால் நூற்றாண்டுக்கு மேலாக கவனத்தைப் பெற்று வருகிறார் மம்தா பேனர்ஜி.

 

மாநில எல்லை தாண்டி, இந்திய மகுடத்துக்கான ஒத்திகையாகவே மம்தா பேனர்ஜியின் அரசியல் எழுச்சியும், ஆவேசப் பாய்ச்சல்களும் சமீப காரமாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.