” எதனையும் சீர்தூக்கிப் பார்த்துச் சிந்திக்க இயலாதவன் முட்டாள். சிந்திக்க முடியாதவன் மதப்பித்தன். சிந்திக்க அஞ்சுகிறவன் அடிமை”
ஒரு நூல் நிலையத்தின் முகப்பில் இவ்வாக்கியம் எழுதப்பட்டிருப்பதை இளம் கார்னீஜியின் கண்கள் கண்டதும் அவருடைய உடல் எல்லாம் அதிர்ந்தது.
ஒரு நாள் நானும் ஒரு நூல் நிலையத்தை ஏற்படுத்தி அதில் இந்த அமர மொழிகளைப் பொரித்து வைப்பேன் என்று தம் மனதிற்குள்ளே அவர் கூறிக் கொண்டார். அப்பொழுது அவர் ஏழை.
எனினும் இளமையில் அவருடைய மனத்தில் வேரூன்றிய அந்த வித்தானது முளையிட்டுப் பெரும் மரமாக வளர்ந்து உலகமெங்கும் தன் தீஞ்சுவைக் கணிகளைச் சொரிந்து நின்றது. நாடெங்கும் நூல் நிலையங்களை நிறுவுவதற்காக பொற்குவைகளை வாரி வாரி வழங்கினார். வழங்கி வழங்கி அவருடைய கைகளும் சிவந்தன.
இவ்வாறு நூல் நிலையங்களை நிறுவுவதில் அவருடைய ஒரே நோக்கம் மக்களினம் அறிவு ஒளியைப் பெற வேண்டும் என்பதுதான்.
அவர் கோடிகோடியாக பணம் ஈட்டும் பொழுது மட்டும் மகிழ்வுறவில்லை. ஈட்டிய பொருள்கள் தன் கைகளை விட்டு அறப்பணிகள் என்ற வாய்க்கால் வழியாக வெளியேறுவதைக் கண்டும் பெருமகிழ்வுற்றார். இப்படிப்பட்ட அதிசய மனிதரின் அற்புத வாழ்க்கை எனும் சுரங்கத்தில் இறங்கி அருமணி கண்டெடுத்து அவற்றைத் தாமும் அணிந்து பெருவாழ்வு வாழ்வோம் பெரும் அரங்கள் செய்வோம் வாருங்கள்!
கோடிஸ்வர கொடைவள்ளல் ஆண்ட்ரூ கார்னிஜியின் வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக எழுதியிருக்கிறார் அப்துற- றஹீம் அவர்கள்.
Reviews
There are no reviews yet.