நண்பர் முத்துமீரான் அம்பாரை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். 1960-களின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த இவர், கவிதை, சிறுகதை, வானொலி நாடகம், கிராமிய இலக்கிய ஆய்வு எனப் பல துறைகளில் காலூன்றியிருக்கிறார். ஏற்கனவே இவரது கவிதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள் ஆகியவை ஒவ்வொரு தொகுதியாக வெளிவந்துள்ளன. இரண்டு கிராமிய இலக்கிய நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
கிராமிய இனத்தை, குறிப்பாக மட்டக்களப்பு முஸ்லீம்களின் மொழிவழக்கைக் கவிதையில் தாராளமாகவும் ஆழமாகவும் கையாண்டவர்களுள் முத்துமீரானும் குறிப்பிடத்தக்கவர்.
யாப்பு மரபும், புதுக்கவிதை மரபும் ஒன்றிணைந்திருப்பது முத்துமீரான் கவிதைகளின் குறிப்பிடத்தக்க பிறதொரு அம்சம் எனலாம். அகவல், கலிப்பா, விருத்தம், சிந்து வடிவங்கள் என்பன முத்துமீரானுக்கு ஓரளவு லாவகமாகக் கைவந்துள்ளன.
நண்பர் முத்துமீரான் இறுக்கமும் செறிவும் மிக்க இத்தகைய கவிதைகளை நமக்கு இன்னும் தருவார் என்று நம்புகின்றோம்.
Reviews
There are no reviews yet.