Skip to content

இந்திய மண்ணை மணம் வீச செய்த இஸ்லாமிய மாமணிகள்

160.00

ஆசிரியர்:ஜெகதா

உதிக்கும் சூரியனுக்கு ஒரு கடமை இருப்பதுபோல, பொழியும் மழை நீருக்கு ஒரு கடமை இருப்பது போல, எரியும் நெருப்புக்கு ஒரு கடமை இருப்பது போல, வீசும் காற்றுக்கு ஒரு கடமை இருப்பதுபோல, தாங்கும் பூமிக்கு ஒரு கடமை இருப்பதுபோல, வாழும் மனிதருக்கு வாழ்க்கையை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான சிந்திக்கும் கடமை இருக்கிறது. அதன் பொருட்டே இப்பூவுலகில் மனிதர்கள் ஏதேனும் ஒரு துறையில் தீவிர பற்றுக் கொள்ள முயல்கிறார்கள்.

ஒன்றில் பற்றுக்கொள்ள யாவற்றையும் துறப்பதன் ரகசியமாக வெற்றியின் சிகரங்கள் அவர்களுக்கு எட்டி இருக்கிறது என்பதே உண்மை.

கர்ம சிரத்தையோடு தன் வாசம் உணர்த்த முற்பட்ட இஸ்லாமிய மாமணிகள் பலர் பல் துறையிலும் பவனி வருகின்றனர்.

மானுட வாழ்விற்கு உய்யும் வழி உணர்த்தும் உயரிய கலங்கரை விளக்காக இஸ்லாமிய மாமணிகள் பலர் இம்மண்ணை மாண்புறச் செய்திருக்கின்றனர். இலக்கியம்,கலை, அறிவியல், வரலாறு, அரசியல், ஆன்மிகம், தேசிய விடுதலை என மானுட நந்தவனத்தின் பல்துறை வாசம் மணக்க இந்திய மண் எங்கும் இஸ்லாமிய மாமணிகள் பங்களிப்பு செய்துள்ளார்கள்.

  1. நாகூர் அனிபா- -இசை முரசு,
  2. குணங்குடி மஸ்தான்- சித்தர்
  3. கவி. கா. மு. ஷரீப்- பாடலாசிரியர்.
  4. சீரடி சாயிபாபா – நல்லிணக்க ஆன்மிகவாதி
  5. அமிர் குஸ்ராவ்- சாஸ்திரிய புலவர்.
  6. அக்பர் – தீன் இலாஹி.
  7. காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப்- சமுதாய வழிகாட்டி.
  8. வைக்கம் முகமது பஷீர் – எழுத்தாளர்.
  9. எம். எஃப். ஹுசைன்- ஓவியக் கலைஞர்.
  10. ஜவ்வாது புலவர்- புலவர் .
  11. முகமது பின் துக்ளக்- சர்ச்சை அரசன் .
  12. அபுல் கலாம் ஆசாத்- கல்வியாளர்.
  13. ஃபக்ருதீன் அலி அகமது- குடியரசுத் தலைவர்.
  14. வண்ணக்களஞ்சியப் புலவர் -புலவர் .
  15. சலீம் அலி-பறவை விஞ்ஞானி.
  16. ஔரங்கசீப் -அரசர்.
  17. அஸ்கர் அலி எஞ்சினியர்- சீர்திருத்தவாதி.
  18. எம். பாத்திமா பீவி- ஆளுநர் .
  19. அலாவுதீன் கில்ஜி- கில்ஜி வம்ச அரசர்.
  20. ஜாகிர் உசேன்- குடியரசுத் தலைவர்.
  21. முகம்மது ரஃபி- திரைப்படப் பாடகர்.
  22. டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்- குடியரசுத் தலைவர்.
  23. ஷாஜஹான் -அரசர்.
  24. சேகனாப் புலவர்- புலவர்.
  25. சாரா ஹமீது அஹமது- பைலட்.
  26. முகம்மது யூனுஸ்- பொருளியலாளர்.
  27. ரசியா சுல்தானா- பெண்ணரசி.
  28. செய்தக்காதிறு சீதக்காதி- வள்ளல் .

இவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாறு இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்திய மண்ணை மணம் வீச செய்த இஸ்லாமிய மாமணிகள்”

Your email address will not be published. Required fields are marked *