About Us
Our Story
காலம் சென்ற பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்களால் 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்” 72 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழில் முதன் முதலாகத் தன்னம்பிக்கை நூல்களை 1948லேயே வெளியிட்டு பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாழ்வில் உயர யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் வழிகாட்டியுள்ளது.
இது நாள் வரை 1500க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. அதில் 1000ற்கும் மேற்பட்ட நூல்கள் பல பதிப்புகள் கண்டுள்ளது.
72 ஆண்டுகளைக் கடந்து பல நல்ல நூல்களை வெளியிட்டு வரும் ஒரு சில தமிழ் பதிப்பகங்களுள் யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸும் ஒன்று.
பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியிட்டாலும் இஸ்லாமிய நூல்களை வெளியிடும் மிகச் சிறந்த பதிப்பகம் என்று எல்லோராலும் போற்றப்படுகிறது.
எங்களது நூல்கள்
தன்னம்பிக்கை¸ வாழ்வியல்¸ வரலாறு¸ கவிதை¸ கட்டுரை¸ சிறுவர் இலக்கியம்¸ மொழிபெயர்ப்பு¸ சமையல் மற்றும் இஸ்லாமிய நூல்கள்¸ இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்¸ இஸ்லாம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் நூல்கள் என பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த நூல்களை வெளியிட்டு வருகிறது.
எங்களுடைய எழுத்தாளர்கள்
எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம்¸ கவிக்கோ அப்துல் ரகுமான்¸ எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா¸ சிலம்பொலி செல்லப்பனார்¸ பேராசிரியர் தி.மு. அப்துல்காதர்¸ சிங்கப்பூர் எழுத்தாளர் ஜே.எம்.சாலி¸ இலங்கை எழுத்தாளர் முத்து மீரான்¸ மலேசிய எழுத்தாளர் டத்தோஸ்ரீ முகமது இக்பால்¸ தோப்பில் முகமது மீரான்¸ வரலாற்று ஆசிரியர் செ. திவான்¸ ஜெகதா¸ நாகூர் ரூமி¸ சி.எஸ்.தேவநாதன்¸ பேராசிரியர் தி. இராஜகோபால்¸ ஆர்னிகா நாஸர்¸ பாத்திமா ஷாஜஹான்¸ ஆர்.பி.எம்.கனி¸ பேராசிரியர் சையது இப்ராஹிம்¸ மஹதி¸ முனைவர் சே. சாதிக் மற்றும் பல முன்னணி எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து உலகத் தமிழ் மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தி வருவதால் உலகத்தில் பல பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் அன்பையும்¸ நன்மதிப்பையும்¸ பாராட்டையும் பெற்று விளங்குகிறது.
Universal Publishers
எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் 1948 முதல் தான் மரணிக்கும் வரை(1993) யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸை நடத்தி வந்தார்கள். அவர்கள் காலமான பிறகு அவரது மருமகன் எஸ்.எஸ். ஷாஜஹான் இந்த பதிப்பகத்தை நடத்தி வருகிறார்.
Late M R M Abdur - Raheem
S S Sajahan
Contact No: +91 94440 47786
+91 95000 47786