பாரசீகக் கவிஞானி ஜலாலுதீன் ரூமி இறை உணர்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர்.
மெய்ஞானக்கவி¸
தத்துவ மேதை¸
மனித இனக் கோட்பாட்டாளர்¸
சூஃபி¸
சீர்திருத்தவாதி – என்று பன்முகப் பரிமாணங்கள்
அவருக்கு
அன்பை மையப்படுத்தி மனம்¸ பொருள்¸ ஆன்மா பற்றிய சிந்தனைகளை ரூமி வழங்கியிருக்கிறார். உயர்நிலைச் சிந்தனைப் பரப்பில் ஒப்பற்ற பங்களிப்பு அவருடையது.
ரூமியின் கவிதைகளில் உண்மை இருக்கிறது. அழகு இருக்கிறது. உலகையே அரவணைத்துக்கொள்கிற பிரபஞ்சமனதுக்குச் சொந்தக்காரர் அவர்.
ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு¸ நீதிக்கதைகள்¸ சில நிகழ்வுகள் (அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் பற்றியது)¸ ரூமியின் கவிதைகளில் தேர்ந்தவை¸ ரூமி கூறும் வாழ்க்கை முறை இவையே இங்கு நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது என்று இந்நூலின் ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
Reviews
There are no reviews yet.