மிர்சா அசத்துல்லா கான் காலிப் (1797-1869) – இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த உருதுக் கவிஞர்களில் புகழ்பெற்றவர். பெரும்பான்மையினரால் விரும்பப்படுகிறவர்.
நேர்மையும்¸ துணிவும்¸ பரிவுணர்ச்சியும் கொண்ட அவர்¸ அறிவுபூர்வமாகக் களிப்பூட்டும் ஆற்றல் மிக்க மனிதருங்கூட.
மற்றவர்களைத் தன்பால் ஈர்த்து அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திறன் உடையவர் அவர். அவரது கஸல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் முனைப்பாக வெளிப்படுத்துவதோடு உலகின் அழகை நேர்த்தியான முறையில் தெரிவிப்பவை. வேறெந்த உருதுக் கவிஞரை விடவும் ஆழ்ந்த உணர்ச்சியும் வீச்சும் அவரிடம் இருந்தன. காலிப்¸ வாழ்வின் அனைத்துக் கட்டங்களையும் பாடியிருக்கிறார். அவர் உலகத்தரமான கவிஞர் என்பதில் ஐயமில்லை. முற்றிலும் புத்தம்புதிய அணுகுமுறை காரணமாகவும் அவர் முக்கியத்துவம் பெறுகிறார்.
சமீபகாலத்தில் காலிப்பின் கவிதைகள் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அவருடைய கருத்துகள்¸ உளவியல் சார்ந்த விசாரணை¸ ஞானம்¸ மரபுக் கவிதை மொழியை ஏற்க மறுப்பது இவை இளைய தரைமுறையினரைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது எனலாம் என்று இந்நூலின் ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
Reviews
There are no reviews yet.