இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் இதுவரை பத்து இலட்சம் நூல்கள் வெளி வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. உலகில் பிறந்த எந்த மனிதருக்கும் இவ்வளவு வரலாற்று நூல்கள் எழுதப்பட்டதில்லை.
அதேபோல முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய இறைத்தூதர்களாகிய மூஸா(அலை)¸ தாவூத்(அலை)¸ ஈசா(அலை)¸ ஆகியோருக்கு இறைவன் அருளிய முறையே தவ்ராத்¸ சபூர்¸ இன்ஜீல் ஆகிய வேதங்களிலும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தோற்றத்தைப் பற்றி அவர்கள் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வேதங்களான ரிக்¸ யஜுர்¸ சாம¸ அதர்வண வேதங்களிலும்¸ புராணங்களிலும் கீதையிலும் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் அவதாரத்தைப் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் தொகுத்து இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்) என்ற இந்த நூலைத் தந்திருக்கிறார் முதுபெரும் எழுத்தாளர்; ஜே.எம். சாலி அவர்கள்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை¸ கதை¸ நாடகம்¸ உரைநடை¸ செய்தி¸ மொழிபெயர்ப்பு என அனைத்து எழுத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர் ஜே.எம்.சாலி அவர்கள் என்றால் அது மிகையாகாது. அவர்கள் எழுதிய “இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம் (ஸல்)” என்ற இந்நூலை எங்களது பதிப்பகத்தின் சார்பில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். இந்நூலை வெளியிட அனுமதியளித்தமைக்கு எங்களது பதிப்பகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
-எஸ்.எஸ். ஷாஜஹான்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்.
Reviews
There are no reviews yet.