“அயல்மொழிக் கவிதைகள்¸ கருத்துக்கள் எனும் மையத்தின்மேல் வட்டம் வரையும் கருவியின் (காம்பஸ்) கூர்மையான¸ முழு நீளமுள்ள காலினை ஊன்றி மற்றொரு காலில் நம்நாட்டு இலக்கிய உணர்வூறும் பேனாவைச் செருகி¸ ஒருமைப்பாட்டுணர்வெனும் சில வட்டங்களைக் காதர் இந்நூலின் தாள்களில் வரைந்துள்ளார ;” என்று சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘அயல்மகரந்தச் சேர்க்கை’ என்னும் இந்நூலைப் பற்றி தனது அணிந்துரையில் கூறுகிறார்.
“விவேகானந்தமும்¸ இராமலிங்கமும்¸ பரமஹம்சமும்¸ அண்ணல் நபிமொழியும் அமுதவாசகங்களோடு பின்னிப் பிணைந்து மானுட வாழ்வின் மறக்கமுடியாத அனுபவங்களைத் தருகின்றது பேராசிரியரின் வித்தகத்தமிழ்” என்று கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘அயல்மகரந்தச் சேர்க்கை’ என்னும் இந்நூலை பற்றி தனது அணிந்துரையில் கூறுகிறார்.
“பார்வை புதிதாய்
எண்ணம் புதிதாய்
சொல்லாடல் புதிதாய்
பாயும் தமிழ் அவர்.
தமிழினத்தை மயக்கும்
இலக்கியத்தின் நயன் அல்ல¸
தமிழினத்தை இயக்கும்
இலக்கியத்தின் பயன்.”
என்று கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘அயல்மகரந்தச் சேர்க்கை’ என்னும் இந்நூலை பற்றி தனது அணிந்துரையில் கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.