தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் இ. சுந்தர மூர்த்தி அவர்கள் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்’ என்னும் இந்நூலின் அணிந்துரையில் இவ்வாறு கூறுகிறார்:
சிலம்பில் காணலாகும் இல்லறம்¸ துறவறம்¸ கட்சியில் அறம். சமுதாய அறம் ஆகியன குறித்து விரிவாக விளக்கும் இந்த ஆய்வு நூல் சிலப்பதிகார ஆய்விற்குப் புதிய வரவாகத் திகழ்கிறது.
சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள் என்னும் இவ்வொரு நூலுள் ஆசிரியரின் பன்னூல்களின் பயிற்சியைக் கண்டு மகிழலாம். இந்திய அறநூல்கள்¸ சமய அறநூல்கள்¸ திருக்குரான்¸ பைபிள்¸ மேலை இலக்கியங்கள் என ஒப்பீட்டு நோக்கில் ஆசிரியர் காட்டும் நூல்கள் நமக்குப் புதிய புதிய சிந்தனைகளைத் தரும் என்பதில் ஐயமில்லை.
புதிய ஆய்வு அணுகுமுறையோடு சிலப்பதிகாரத்தை ஆராய்ந்த ஆசிரியரின் இந்நூல் தமிழாய்வில் குறிப்பாக சிலப்பதிகார ஆய்வில் புதிய வெளிச்சத்தைத் தரும். இளைய தலைமுறையினருக்கு இந்நூல் புது வரவு; நல்வரவு.
Reviews
There are no reviews yet.