எகிப்தை ஆண்டு வந்த ஃபிர் அவ்ன் என்னும் கொடுங்கோல் மன்னன்¸ தானே இறைவன் என்றும்¸ நாட்டு மக்கள் அனைவரும் தனக்கு அடிபணிந்து
தன்னையே வணங்க வேண்டும் என்றும் அடக்கி ஆண்டு வந்தான்.
அப்போது எல்லாம் வல்ல ஏக இறைவன் ஃபிர் அவ்னை அடக்கி ஏகத்துவத்தை மக்களுக்குப் போதிக்க நபி மூஸா(அலை) அவர்களை இவ்வுலகில் பிறக்கச் செய்தான். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி மக்களுக்கு ஏக இறைக் கொள்கையைப் பரப்பி வந்தர்கள். ஃபிர் அவ்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் மூஸா நபி(அலை)யைக் கொல்லச் சதி செய்தான். அப்பொழுது இறைவன் மூஸா(அலை) அவர்களையும் அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்களையும் காப்பாற்றுவதற்காகக் கடலைப் பிளக்கச் செய்து அவர்கள் கடலைக் கடந்து தப்பிக்க வைத்தான். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஃபிர் அவ்னையும் அவனுயை படையினரையும் கடலில்மூழ்கடிக்கச் செய்து மடியச் செய்தான்.
இது போன்ற ஏராளமான சம்பவங்களையும் மூஸா (அலை) அவர்கள் எவ்வாறு சன்மார்கத்தை நிலைநாட்டப் பாடுபட்டார்கள் என்பதையும் இந்நூலில் விரிவாகப் பார்க்கலாம்.
Reviews
There are no reviews yet.