கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பங்குபெற்ற கவியரங்கங்களில் பாடப்பெற்ற கவிதைகளின் முதல் தொகுதியே ‘இறந்ததால் பிறந்தவன’; என்று தொகுத்து தரப்பட்டுள்ளது.
சில எடுத்துக்காட்டுகள்:
வேலூரில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கவியரங்கம்.
தலைப்பு: குடும்ப நலம். நடந்த இடம் ஒரு கல்யாண மண்டபம்.
என் கவிதையை இப்படித் தொடங்கினேன்:
கல்யாண மண்டபத்தில்
கருத்தடைப் பிரசாரம்
அவ்வளவுதான் தூங்கிக் கொண்டிருந்த அவை
எழுந்து ஆரவாரம் செய்தது.
தஞ்சாவூரில் கலைஞர் தலைமையில் கவியரங்கம்
கலைஞர் அரங்கத்திற்கு வந்தபோது கவிஞர்கள்
யாரும் வந்திருக்கவில்லை. அவர்கள் சற்றுத்
தாமதமாக வந்தனர்.
கலைஞர் தம் கவிதையில் ‘என்னைக் காக்க
வைத்த கவிஞர்களே!’ என்று குட்டுவைத்தார்.
என்முறை வந்தபோது நான் கூறினேன்:
காக்கவைத்த கவிஞர் எனத்
தாக்கிய தலைவரே!
வாக்களித்தோம்; பதவியிலே
வைத்துள்ளோம்; நம்மையெல்லாம்
காக்கத்தா னேவைத்தோம்
காத்திருக்க மாட்டீரோ?
அரங்கம் ஆரவாரத்தால் அதிர்ந்தது.
கலைஞரைத் திரும்பிப் பார்த்தேன். அவர்
சிரித்துக் கொண்டிருந்தார்.
அவர் கோபம் போன இடம் தெரியவில்லை.
Reviews
There are no reviews yet.