மனிதன் இவ்வுலகில் தோன்றியது முதல் இதுகாறும் எத்தனை எத்தனையோ இடங்களில் எத்தனை எத்தளையோ தடவைகள் வழுக்கி விழுந்திருக்கிறான். அவற்றின் காரணமாக அவன் அடைந்த அனுபவங்கள்¸ படித்த பாடங்கள் பல. அவை தன் வருங்காலத் தலைமுறையினருக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடனும்¸ அவன் செய்த தவறுகளை நாமும் மீண்டும் மீண்டும் செய்து தவறுப் படுகுழியில் வீழ்ந்து நம் முன்னேற்றத்திற்குத் தடை விதித்துக் கொள்ளக் கூடாதென்ற நன்னோக்கத்துடனும் அவற்றை அவன் நமக்கு விட்டுச் சென்றுள்ளான். அவற்றை எல்லாம் தொகுத்துதான் “வழுக்கலில் ஊன்றுகோல்” என்ற பெயருடன் இந்நூலை எழுதியிருக்கின்றார் அப்துற்-றஹீம் அவர்கள். இது உன் வாழ்வுப் பாதைக்கு ஓர் ஊன்றுகோலாக அமையும். இதனை ஊன்றி நீ வாழ்வுப் பாதையில் அடியெடுத்து வைப்பாயாயின்¸ நல்வழி என்று நினைத்துப் படுகுழியில் வீழ்ந்து உன் வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ளாது¸ நீ விரைவில் வெற்றி நகரை அடைய இது உறுதுணையாய் விளங்கும் என்பது உறுதி.
Reviews
There are no reviews yet.