எண்ணமே வாழ்வு என்ற தனது நூலைப்பற்றி அதன் ஆசிரியர் அப்துற்-றஹீம் கூறுகிறார்.
இந்த உலகில் நிலவும் துன்பம் துயரம் ஆகியவற்றிலிருந்தும் தப்ப ஒரு வழி இல்லையா? இவ்வுலகமே ஒரு துன்பப் படுகுழி தானா? இதில் வந்து மாட்டிக் கொண்டவர்களெல்லாம் துன்புற்று நலிந்து மெலிந்து மடிய வேண்டியது தானா? உலகிலே இருந்து கொண்டு இன்ப வாழ்வைப் பற்றி எண்ணுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல் தானா? நீரென்று நினைத்துக் கானலை விரட்டிக் கொண்டு செல்வது போல் தானா? என்று நானும் ஏங்கித் தவித்துப் பிரலாபித்தேன்.
அப்பொழுது என்னுள்ளிலிருந்து ஒரு மெல்லிய குரல்¸ “இல்லை அப்துற்-றஹீம்! ஒரு போதும் இல்லை¸ உலகம் இன்பத்தின் உறைவிடம்¸ அதனை மனிதனே துன்பத்தின் இருப்பிடமாகச் செய்து கொள்கின்றான்”. “அது வெற்றியின் சிகரம். அதனை மனிதனே தோல்வியின் பாதாளமாக ஆக்கிக் கொள்கிறான் அது நன்மையின் ஊற்று. அதனை மனிதனே தீமையின் கேணியாக ஆக்கிக் கொள்கிறான்” என்று கம்பிரமாக முழங்கியது.
இதைக் கேட்டதும் எனக்கு வியப்பேற்பட்டது. “நானும் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ முடியுமா? வளவாழ்வு வாழ முடியுமா? பெரு வாழ்வு வாழ முடியுமா?” என்று ஆவலோடு வினவினேன். “முடியும்¸ முடியும்¸ உன்னாலும் முடியும் உலகிற் பிறந்த எல்லோராலும் முடியும்” என்று அது திடமாக மறுமொழி பகர்ந்தது. “அப்படியா! அது எப்படி?” என்று வினவினேன். “கேள்! கூறுகிறேன்” என்று சொல்லி அது பின்வருமாறு பேசத் தொடங்கியது.
“எண்ணமே வாழ்வு” என்ற நான் எழுதிய நூல் பேசுவதைக் கேளுங்கள்.
Reviews
There are no reviews yet.