கேரளத்தில் புதிதாக அரேபிய ஆண்கள் கேரளப் பெண்கள் கலந்து உருவான இனம் மாப்பிள்ளா. மாப்பிள்ளைகளில் முஸ்லிம்கள் உண்டு. மாப்பிள்ளைகளில் கிறிஸ்தவர்கள் உண்டு. மாப்பிள்ளைகளில் யூதர்கள் உண்டு என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கேரளத்தில் முஸ்லிம் மாப்பிள்ளைமார்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அஞ்சாது மார்பு காட்டி நின்று அயராது போரிட்டு தங்களது இன்னுயிரைத் இத்திருநாட்டின் விடுதலைக்கு அர்ப்பணித்த வரலாற்றின் சில பக்கங்களை விரிவாகவே பார்ப்போம். நமது உண்மையான வரலாற்று மரபை உயர்த்திப் பேச வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். எடுத்துரைக்க வேண்டிய அவலத்தில் இருக்கிறோம். கோரிக்கை வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மலபாரில் மாப்பிள்ளைகள் 19ஆம் நூற்றாண்டு முழுவதும் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடி இருக்கிறார்கள். 20ஆம் நூற்றாண்டின் துவக்ககாலங்களிலும் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திகைப்பூட்டக்கூடிய முறையில் பேரெழுச்சியுடன் போராடினர்.
Reviews
There are no reviews yet.