அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியில் 35 ஆண்டுகள் விலங்கியல் துறை விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும், விலங்கியல் மற்றும் உயிர்வேதியியல் துறைத் தலைவராகவும், மாரை நேரக் கல்லூரியின் முதல்வராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் பணியாற்றிப் பழுத்த அனுபவம் பெற்ற பேரறிவாளர் இவர். மாணவர்கள் திரண்டு இவர் பெயரில் மாணவ நலநிதி ஒன்றை நிறுவியுள்ளமை இவரது கல்விப் பணியின் மேன்மையை உணர்த்தும். இவரது உயிர்வேதியியல் நூல் மாணவர்களுக்குச் சிறந்த கலங்கரை விளக்கம். கல்லூரிப் பணியில் (2003) ஓய்வு பெற்றாலும் சமுதாயப் பணி இவரது மறைவு வரை (04.04.2021) தொடர்ந்து கொண்டே இருந்த்து. மறைந்த பேராசிரியரின் நிறைந்த ஆய்வுத் திறமைக்கும் தெளிந்த ஆன்மிக வளமைக்கும் சான்றே இந்த நூல்…
-பேராசிரியர் சேமுமு. முகமதலி.
Reviews
There are no reviews yet.