இஸ்லாமியக் கல்வி வாரியத்தினால் 1997ஆம் ஆண்டு மே மாதம் மலேசியாவின் உலக இஸ்லாமியத் தமிழ் மாத இதழ் “நம்பிக்கை” மலர்ந்த்து. முதல் இதழிலிருந்து தொடர்ந்து 19 ஆண்டுகளாக இதழின் இறுதிப் பக்கத்தில் வர்த்தக சிந்தனைகளை இஸ்லாமியக் கல்வி வாரியத்தின் தலைவரும், நம்பிக்கை மாத இதழின் நிறுவனரும், கௌரவ ஆசிரியருமான டத்தோஸ்ரீ ஹாஜி முஹம்மது இக்பால் எழுதி வருகின்றார்.
ஒவ்வொரு மாதமும் வாசகர்களால் பெரிதும் விரும்பிப் படிக்கும் ஒரு பகுதியாக கடைசிப் பக்கக் கட்டுரைகள் அமைந்து வருகின்றன என்பதை வாசகர்கள் எழுதும் கடிதங்களிலிருந்தே அறியலாம். நம்பிக்கையில் டத்தோஸ்ரீ ஹாஜி இக்பால் எழுதத் தொடங்கியதும் எல்லா நிலைகளிலிருந்தும் அதனைப் படிப்பவர்கள் இருப்பது தெரிந்தது. குறிப்பாக வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் ஈடுபட எண்ணுபவர்களும் அதனைத் தங்களுக்கே கூறப்பட்டுள்ள விஷயத்தைப் போல் கூர்ந்து படிக்கிறார்கள்.
முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத சகோதரர்களையும் அப்பகுதி கவர்ந்திருக்கிறது. இதனை நூலட வடிவமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வாசகர்கள் முன் வைத்த கோரிக்கையை இப்போதுதான் செயல் வடிவம் கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
ஒருமணி நேரச் சிந்தனை ஓராண்டு வணக்கத்தைவிடச் சிறந்தது. ஆம், இந்நூல் எல்லாருக்குமானது. படித்துப் பயன்பெறுவதோடு வணிகத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும் ஈடுபட எண்ணம் கொண்டோருக்கும் வழங்கி மகிழுங்கள் என்று ஹாஜி சஹிபுத்தீன் அப்துல் காதர் அவர்கள் இந்நூலைப் பற்றி கூறியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.