இது எண்ணங்களின் வண்ணங்கள். கறந்தவை அல்ல சுரந்தவை. சுரந்தவை வற்ற நினைத்த போதெல்லாம் ஊற்றுகள் எங்கே எனத் தேடிக் கண்டுபிடித்தவை.
ஆகவே, கவிதைகளுக்கு கால்கள் இல்லை, சிறகுகள்தான் உண்டு.
பார்வை உண்டு. எல்லைகள் இல்லை.
ஆகாய நீலம் இது நம் கண்களின் எல்லை. அதற்கு அப்பாலும் பிரபஞ்சம் உண்டு.
அந்தப் பிரபஞ்சத்தைத் தேடியவன் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் மனசாட்சி தேடி நமக்கு பாதை வடித்த நல் உள்ளங்களின் வாழ்வைத் தேடியதில் விளைந்தவையே இவை.
நதி நீரில் நீராடியதில் கிடைத்தவை அல்ல. நெருப்பாற்றில் குளித்தபோது கிடைத்தவை. கிடைத்தவற்றை மாலையாகக் கோர்த்தேன். கோர்த்தவைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன், என்று இந்நூலின் ஆசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.