கடையேழு வள்ளல்களுக்குப் பின்னர் வள்ளல் இல்லை என்கிற குறை தீர்க்கத் தோன்றியவர் வள்ளல் சீதக்காதி மரைக்காயர். இவர் பெரிய வணிகராகவும் சிறந்த வள்ளலாகவும் உயரிய தமிழ்ப் புலவராகவும், ஏழைகளின் தோழராகவும் எல்லோருக்கும் உதவும் மனிதப் புனிதராகவும் வாழ்ந்தார்.
வள்ளல் சீதக்காதி வீடு, அவர் கட்டிய பள்ளிவாசல், வசந்த மாளிகை, தோப்புகள் எல்லாம் கீழக்கரையில் உள்ளன. இவருடைய தந்தை, தாய், பாட்டனார் முதலிய முன்னோர்கள் வாழ்ந்து மறைந்ததும் இங்குதான்.
வள்ளல் சீதக்காதி ஜாதி, சமய வேறுபாடு கருதாமல் வருவோர்க்கெல்லாம் வரையாது வழங்கி வந்தார். ராமேஸ்வரக் கோவிலுக்கும் அறக்கட்டளை செய்துள்ளார். இது அவரின் சமய நல்லிணக்கத்தைக் காட்டுகிறது.
பயனுள்ள இவ்வரிய ஆராய்ச்சி நூலுக்கு, தக்க சான்றுகளும் மேற்கோள்களும் வலு சேர்க்கின்றன.
Reviews
There are no reviews yet.