பிரபல ஆங்கில எழுத்தாளரான தாமஸ் ஹார்டி எழுதிய “ஃபார் ஃபிரம் த மாட்டிங் கிரௌடு” என்ற பிரபலமான புதினத்தின் தமிழாக்கமே “குணத்தின் குன்று” என்ற இந்நூல். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன் (1954ல்) அப்துற்-றஹீம் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு எங்களது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது.
தான் காதலித்த மங்கை தன்னைக் காதலிக்காத போதிலும் அவளிடம் வேலைக்கமர்ந்து அவன் செய்யும் தன்னலமற்ற தொண்டும் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அவளை மற்றவர்கள் காதலிக்கும் பொழுதும் அவள் வேறொருவனைக் காதலிக்கும் பொழுதும் அவன் மன அடக்கத்துடன் இருக்கும் மாண்பும் அவளுக்கு யாதொரு தீங்கும் நேராவண்ணம் அவன் அவளுடைய நலனில் அக்கறை செலுத்தும் பாங்கும் அவனுடைய நேர்மை தவறா நெறிமுறையும் அவனை ஒரு மகா மனிதனாக ஆக்கி விடுகின்றன. இவ்வளவுக்கும் அவன் ஓர் ஏழை. சிறு குடிலில் வசிக்கின்றான். எனினும் வானை முட்டும் மாட மாளிகையில் வாழ்ந்து செல்வத்தில் புரண்டு கொண்டிருக்கும் குபேர மன்னர்கள்கூட அவனுடைய காலடித்தூசிக்கு நிகராக மாட்டார்கள்.
அப்படிப்பட்ட மாமனிதனே இக்கதையில் குணத்தின் குன்று போல் காட்சி வழங்குவதால் இந்நூலுக்கு “குணத்தின் குன்று” என்று பெயரிட்டுள்ளார் அப்துற்-றஹீம் அவர்கள்.
Reviews
There are no reviews yet.