அமானுஷ்ய விஷயங்களின் மேல் மனித சமூகம் காலங்கலாமாய்க் கொண்டிருக்கிற ஈர்ப்பும் ஈடுபாடும் இக்கதைகளில் வெளிப்படுகின்றன. இக்கதைகளின் மூலப் பெருமை தங்களுடையதே என்ற உரிமைக் குரல் ஒலிகள் எல்லாப் பக்கங்களிலும் கேட்கின்றன. ஆயினும் வெகுவாகக் கிரேக்கம், ரோமாபுரி, பாரசீகம், எகிப்து, சீனா போன்ற நாடுகளில் தொன்மக் கதைகள் தோன்றக் கண்டுள்ளயும் அவற்றின் பங்களிப்பே உலக மொழிகளின் இலக்கிய வளங்களுக்கும் சமய வரலாறுகளுக்கும் அடிப்படையாக இருப்பதை நாம் அறியலாம்.
நமது நாட்டிலும் இத்தகைய தொன்மக் கதைகள் ஏராளம். நமது இதிகாசங்கள், புராணங்கள் என்பன இவற்றைச் சார்ந்ததே. இந்நூல் கிரேக்கத் தொன்மக் கதைகளை உரைப்பதாகும். கிரேக்க நாட்டுக் கதைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எத்தனையோ சொற்பதங்களுக்கு மூலமாய் அமைந்திருப்பவை கிரேக்கர்களின் தொன்மக் கதைப்பாத்திரங்களே.
Reviews
There are no reviews yet.