‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்னுடைய மூன்றாவது
கவிதைத் தொகுதி!
இது பாலையின் வெப்பத்தில் மலர்ந்த
பாரிஜாத மலர்களின் மஞ்சரி!
இம்முறை எனது பயணம்
இருண்ட உலகின் எல்லைகளை நோக்கியது.
நான் பேனா முனையின்ஒளி வெளிச்சத்தோடு அலைந்தபோது
அங்கே ஒளிரும் மின்மினி சிதறல்கள்
ஓவியக் கூட்டமாய்!
பலவித வண்ணங்களில்
பலவித வடிவங்களில்!
என் பேனா முனையில்
காந்தமாய் ஒட்டிய சிதறல்களை எடுத்துக் கோர்த்து
உங்கள் பார்வைக்கு ஒளிவீசத் தந்துள்ளேன்!
ஒளிரும் பூக்களின்
வாசனை வெளிச்சத்தை
நீங்களும் முகருங்கள்.
‘நட்சத்திரச் சிதறல்கள்’
கவிதை தொகுதிக்கு மஸ்கட் மு.பஷீர் எழுதிய முன்னுரை.
Reviews
There are no reviews yet.