நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயாக முழு மனித உலகிற்கும் வழி காட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட திருமறை திருக்குர் ஆன் ஆகும். அந்தத் திருமறையில் மனிதர்களுக்கு அனைத்து துறையிலும் வழிகாட்டக்கூடிய அற்புத கருத்துக்கள் பரவிக்கிடக்கின்றன.
இந்தக் கருத்துக்களை எல்லாம் தொகுத்து, பொருள் வாரியாகப் பிரித்து அளித்திருக்கிறார் பேராசிரியர் சையத் இப்ராஹிம் அவர்கள். குறிப்பிட்ட பொருள் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இந்த நூல் மூலமாக மிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அழைப்பாளர்கள், மாணவர்கள் என அனைத்து மக்களுக்கும் மிகப்பெரும் துணையாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.