Skip to content

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

350.00

ஆசிரியர் :நாகூர் ரூமி

இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இன்று உலகெங்கும் தவறாக புரியப்பட்ட மதமும் மக்களும் ஆவர். முஸ்லிம்களில் சிலர் கூட இஸ்லாத்தை அதன் உண்மையான பொருளில் சரியாக புரிந்துகொள்ளாமல், பல தவறான புரிதல்கள் உடையவர்களாகவே இருக்கின்றனர். இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்ற மதமாகவும்; முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல் புரியும் மக்கள்  எனவும் உலகம் தழுவிய அளவில் ஆதிக்க சக்திகள் செய்துவரும் பொய் பிரச்சாரத்திற்கு ஓர் எதிர்வினையாக இஸ்லாத்தை அதன் எதார்த்த நிலையில் அறிமுகப்படுத்து கின்ற முயற்சி இது.

ஜிகாத் என்ற அரபிச் சொல்லின் பொருள் தவறாக புரியப் பட்டு முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய்தல் என்ற பொருளில் குர்ஆனில் கையாளப்பட்டுள்ளதாக செய்து வரப்படும் பிரச்சாரத்திற்கு மறுப்பாக, குர்ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் பல சான்றுகள் முன்வைக்கப்

படுகின்றன. ஜிஹாத் என்றால் (சமூக நன்மைக்காக) கடுமையாக முயற்சித்தல் என்ற பொருளில் குரானில் கையாளப்பட்டிருக்கிறது. போதைப் பொருட்களும் சமூகத் தீமைகளுக்கு எதிராக போராடுவதும் அடிமைகளுக்கு எதிராகவும் நாட்டு  விடுதலைக்காகவும் நடத்தும் போராட்டம் கூட இஸ்லாமிய பார்வையில் ஜிஹாத் ஆகும்.

‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற தலைப்பு இருந்தாலும் இஸ்லாத்தை மிக ஆழமாக எளிய தமிழில் அறிமுகம் செய்யும் கருத்துச் செறிவான ஒரு கருவூலம் இது. இஸ்லாத்தின் நிஜமுகத்தை முஸ்லிம்களுக்கும், தேடல் உடைய பிறசமய சகோதரர்களுக்கு எடுத்துக்காட்டும் ஒரு கண்ணாடி.

இவ்வாறு நாகூர் ரூமி ‘எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ என்றநூலிற்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவர்கள் அளித்த அணிந்துரையில் கூறியிருக்கிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்”

Your email address will not be published. Required fields are marked *