இந்நூலில் மறைவாக வைக்கப்பட்டுள்ள இறைவனின் மாண்பார்ந்த திருப்பெயராகிய இஸ்முல் அஃலம் பற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கருத்துக்களை அரபி, பார்சி, உருது ஆகிய நூல்களில் இருந்து ஆய்ந்து தேடி எடுத்து எழுதி இருப்பதுடன் அவை அனைத்தையும் தொகுத்து ஒரு ‘துஆ’வாக இதன் இறுதியில் இணைத்துள்ளேன்.
இது சிறுநூல் எனினும் பெருநூல். பெரு வாழ்வு நல்கும் அருள் நூல். எனவே இதனை தமிழ் கூறும் நல்லுலகு வாழும் முஸ்லீம் பெருங்குடி மக்கள் நன்முறையில் பயன்படுத்தி அல்லாஹ்விடமிருந்து பெருவரம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்; அல்லாஹ்வுக்கு உகந்த அறவாழ்வு, அருள் வாழ்வு வாழவேண்டும் என்று விழைகின்றேன்; இறைஞ்சுகிறேன்.
இவ்வாறு அப்துற்-றஹீம் அவர்கள் இந்நூலின் முன்னுரையில் கூறியிருக்கின்றார்.
Reviews
There are no reviews yet.