Skip to content

ஒளிவெள்ளம் (சமூக நாவல்)

60.00

‘அறம் செய விரும்பு’ என்று பன்னூறு ஆண்டுகளுக்கு முன் அவ்வைப் பிராட்டியார் எழுப்பிய சங்கநாதப் பேரொலியை மையமாகக்

கொண்டு பின்னப்பட்டுள்ள இந்த ஒளிவெள்ளம் என்னும் சமூக நாவல் தமிழ் மக்களுக்கு ஓர் அரிய நல்விருந்து. அம்மூதாட்டியார் ஆரஞ்செய் என்று ஆணையிடாது ‘அறஞ் செய்ய விரும்பு’என்று அன்புக் கரங்களால் அரவணைத்து அறவுரை பகிர்ந்தி ருப்பதன் மறைபொருளே இந்நாவல் முழுவதும் ரேகை விட்டு படர்ந்துள்ளது.

அந்த அமுத மொழியானது ஒவ்வொருவனின் குருதியோடு குருதியாக ஓடி அவனை வாழ்விக்க வேண்டும் என்னும் தன் நினைவு கொண்டே இந்த நாவல் எழுந்தது. மாநிலத்தில் மனிதனாய் பிறந்த ஒருவன் கோடிச் செல்வனாகவும் மகாத்துமாக்களின் மன்னனாகவும் ஆவதற்கான இரகசியமும் இம்மைப் பேறுகளை  மட்டுமல்லாது மறுமைப் பேறுகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் இவ்வுலகிலேயே இன்பச்சுவன வாழ்வு காண்பதற்கான வழியும் வாழையடி வாழையாக அவனை வழித்தோன்றல்கள் வான் புகழ் பெற்று வளமுடன் வாழ்ந்து வருவதற்கான வகையும் அந்த அமுத மொழியில் பொதிந்து கிடைக்கின்றன,மறைந்து கிடக்கின்றன. எவ்வாறு என்று நீங்கள் வினவலாம். படித்துப் பாருங்கள்.

இவ்வாறு அப்துற்-றஹீம் அவர்கள் ஒளிவெள்ளம் என்ற சமூக நாவலுக்கு அவர்கள் எழுதிய அணிந்துரையில் கூறியிருக்கிறார்.