வாழ்க்கையின் போர்க்களத்தில் ஒவ்வொரு முனையிலும் வீரப் போரியற்றி வாகை சூடிய உலகப் பெருமக்களின் பெரு வாழ்வானது நம் மக்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கி அவர்களும் வாழ்வில் உயர்வடைவதற்கு வழி கோல வேண்டும் என்னும் நோக்கத்துடன் இந்நூலை நாம் தமிழுலகிற்கு அளித்துள்ளோம்.
வாழ்க்கைப் போரில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் கையாண்ட குண விசேடங்கள் ஆகிய ஆயுதங்கள் யாவை தனிப் பண்புகளாகிய படைகள் யாவை, என்பனவற்றை நம் மக்கள் நன்கு உணர்ந்து அதை தங்களுக்குவந்ததை, தங்களுக்கு ஏற்றதை தாங்களும் மேற்கொண்டு வாழ்க்கைப் போரில் வெற்றி மாலை சூடி வெளி வருவார்களானால் அதுவே நாம் அடையும் மகிழ்ச்சியாகும்.
பத்து முனைகளில் முன்னேறிய வீரர்களின் பாங்கான சத்திரங்களின் தொகுப்பே இந்த ‘உலக மேதைகள்’ காந்திஜி- மகான் மன்னர்,
ஐன்ஸ்டீன்- கணித விற்பன்னர், ஷேக்ஸ்பியர்-புலவர் நாயகம்,
நெஹாரு- விடுதலை வீரர் ,
சரோஜினி – பெண்கள் திலகம், மவுண்ட்பேட்டன்- தளபதி, ராஜதந்திரி, ராய்ட்டர் – வர்த்தக அரசர், பயர்டு- நாடு நரூபகர்,
கிரேட்டா கார்போ- திரை வெள்ளி
ரிப்ளே – சைத்திரிக நிபுணர் என்னும் முறையில் உங்கள் முன் காட்சி வழங்குகின்றனர். அவர்களின் காட்சி உங்களுக்கும் மாட்சியை தரும் என்று நம்புகின்றோம்.
Reviews
There are no reviews yet.