குர்ஆனை நேரடியாகப் படித்து புரிந்து கொள்வது கடினம். ஒரே தலைப்பில் அமைந்த கருத்துக்கள் பல அத்தியாயங்களில் பரவிக்கிடக்கும்.
அறிஞர் மஹதி குர்ஆனின் கருத்துக்கள் அனைத்தையும் அரும்பாடுபட்டுப் பொருளடக்க வரிசையில் இந் நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். இதனால் குறிப்பிட்ட பொருள் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை மிக எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
முஸ்லிம் பேச்சாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும்.
பிற மதத்துச் சகோதரர்களுக்கும் குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான கையேடு.
(கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் தந்தையான இந்நூலாசிரியர் மஹதி இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இதழ்களில் கதை, புதினம் ,கட்டுரை என்று எழுதிக் குவித்தவர். முதுபெரும் எழுத்தாளர் என்று பாராட்டப் பெற்றவர். மறைந்து கிடந்த தமிழக இஸ்லாமிய வரலாற்றுப் புதையலை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்தவர்.)
Reviews
There are no reviews yet.