லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் முக்கூட்டு மேதையாகத் திகழ்கின்றார் கலீல் ஜிப்ரான்.
அரபி அவர் தாய்மொழி. பல நூல்களும் கட்டுரைகளும் தாய் மொழியில் எழுதி அமெரிக்காவிலும் அரபு நாடுகளிலும் எகிப்து நாட்டிலும் வெளிவந்தன.
மிகப்பெரிய சிந்தனையாளர், ஞானி, அஞ்சாநெஞ்சர். நூறு ஆண்டுகளுக்கு முன்பே தனிமனித ஓவியக்கண்காட்சியை உலகின் மிகப்பெரிய நகரங்களில் நடத்தியவர்.
ஆங்கிலத்தில் புலமை பெற்று ஆங்கிலத்திலேயே பல நூல்களை எழுதி சிறப்பு பெற்றவர். 1883இல் பிறந்து 1931 இல் மறைந்தார்.
இவர் எழுதிய Tears and laughter என்ற கண்ணீரும் புன்னகையும் நூலில் வெளியான கட்டுரை, கதை, கவிதைகளின் தொகுப்பு தான் ‘ஞான தரிசனம்’. இந்நூலை தமிழாக்கம் செய்தவர்
ஆ. மா. ஜெகதீசன் ஆவார்.
Reviews
There are no reviews yet.