Skip to content

சொல்லம்பு மகான் ஜவ்வாது புலவர்

60.00

இலக்கியம் என்பது உலகு முழுவதற்கும் பொதுவானது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் மலர்ந்த காலக்கட்டம் தென்னகத்தில் நாயக்கர், மராட்டியர், அந்நியநாட்டவர்களான ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர்கள் எனத் தமிழரின் ஆதிக்கம் நம்மை விட்டுச் சென்ற, தமிழுக்கு ஆதரவில்லாத காலக்கட்டமாகும். அவ்வேளை ‘அழியும்போது அரும்பு முளைத்தாற் போல’ இஸ்லாமியத்தமிழ் முளைத்தது.

அனைவரும் தமிழில் ஏற்கெனவே இருக்கக்கூடிய வடிவங்களில் மட்டுமே இலக்கியம் படைத்தபோது தமிழில் இல்லாத வடிவங்களான மசாலா, கிஸ்ஸா, முனாஜாத் எனப் புதிய வடிவங்களில் 80 நூல்கட்குமேல் தந்துள்ளனர். இஸ்லாமியர் தமிழுக்காகவே உருவாக்கிய இலக்கிய வடிவம் ‘படைப்போர்’ இலக்கியம். கிட்டத்தட்ட பதினெட்டு படைப்போர் இலக்கியங்கள் உள்ளன. தமிழில் ‘நொண்டி நாடகம்’ என்ற சமுதாயச் சீர்கேடுகளை எடுத்துக்காட்டும் இலக்கிய வடிவமும் இஸ்லாமியர் தந்ததே. முதன் முதலில் திருமண வாழ்த்து கொண்டு வந்து தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் இஸ்லாமியத் தமிழ் புலவர்களே!! நாமா எனும் பாரசீக இலக்கிய வடிவத்தையும் இவர்களே தந்தனர்.

அரபுத்தமிழ் என்னும் புதுவடிவம் தந்ததால் மொழிவளர்ச்சி அதிகமாகியது. ஆயிரத்து நானூறு இலக்கியங்களுக்குமேல் தமிழுலகுக்கு அளித்த இஸ்லாமியத் தமிழ் புலவர்கள் வரிசையில் முன்னணியில் வருபவரே முஹ்யத்தீன் ஆண்டகை பிள்ளைத்தமிழ் பாடிய மகான் ஜவ்வாதுப்புலவர் அவர்கள்.  அவர்களின் ஏராளமான படைப்புக்களில் இது ஒன்றே முழுமையாக நமக்கு கிட்டியுள்ளது. இதனை ஜவ்வாதுப்புலவர்களின் வழித் தோன்றலான சகோதரர் கு.ஜமால் முஹம்மது அவர்கள் ‘சொல்லம்பு – மகான் ஜவ்வாதுப்புலவர்’ எனும் நூல் வடிவில் அவர்களது வரலாற்றுக் குறிப்புக்களுடன் முஹய்த்தீன் ஆண்டகை பிள்ளைத்தமிழ் மூலத்தையும் அச்சில் வடித்துள்ளது மறைந்துவிட்ட நம் அறிவுப் புதையல்களை வெளிக்கொணரும் நன்முயற்சியாகும்.

இன்னும் ஏராளமான மறக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களையும் வெளிக்கொணர வேண்டும் என்ற இவரின் ஆதங்கம் நிறைவேற இந்நூல் ஒரு விடிவெள்ளியாகட்டும். வாழ்த்துக்கள்!! வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக!!! ஆமீன்!!! என்று பேராசிரியர் டாக்டர். சேமுமு. முகமதலி அவர்கள் தனது வாழ்த்துரையில் சொல்லம்பு மகான் ஜவ்வாது புலவர் என்ற இந்நூலைப் பற்றி கூறுகிறார்.

 

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “சொல்லம்பு மகான் ஜவ்வாது புலவர்”

Your email address will not be published. Required fields are marked *