பூலான் தேவி….. எங்கோ கடந்தகாலங்களில் ‘சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளை அரசி’ என்றும் , ‘பண்டிட் குயின்’ என்றும் பலராலும் இந்தியாவில் அழைக்கப்பட்டு உலகம் உற்று நோக்கிய ஓர் அரசியல்வாதி.
22 பேர் படுகொலைச் சம்பவத்தில் இந்தியாவையே நடுநடுங்கச் செய்ததால் உத்தரப் பிரதேச முதல்வராக அப்போது இருந்த
வி. பி .சிங் தமது பதவியை இராஜினாமா செய்வதற்குக் காரணமாக இருந்தார் பூலான்தேவி.
பிறக்கும்போதே அவள் கொள்ளைக்காரியா? கொள்ளைக்கார கும்பலின் தலைவனா இவளது தந்தை ?
ஒரு பெண் அப்படி என்றால் எப்படி சம்பல் பள்ளத்தாக்கின் புகழ்பெற்ற கொள்ளைக்கூட்டத் தலைவியானாள்?
ஒரு கொள்ளைக்காரி எப்படி இந்திய ஜனநாயக நாடாளு மன்றத்தில் உறுப்பினராக, அரசியல்வாதியாக பரிணமித்தார்?
வன்முறைக் குற்றங்களில் பெரும்பான்மை மக்களை வசீகரித்த சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரி பூலான் தேவியைப் பற்றி ஊடகங்களும் பத்திரிகைகளும் தங்களுக்குத் தோன்றிய யூகங்கள் அடிப்படையில் அவளைப்பற்றி கணக்கிலடங்காத கற்பனைக் கதைகளையும் சித்திரங்களையும் மக்களிடையே பல ஆண்டுகளாக விதைத்திருந்தன.
கலைஞர்களின் கற்பனைக்கு உரமாகவும் உணவாகவும் மாறிப் போயிருந்த பூலான் தேவியின் வாழ்க்கை எண்ணிக்கை இல்லா மர்ம முடிச்சுகளைக் கொண்டது.
எனவேதான் அதனை அவிழ்த்துப் பார்க்கும் முயற்சியில் சுவாரஸ்யமான கற்பனைப் படைப்பாளிகள் உருவாகினர்.
இந்தியப் பாராளுமன்றத்திற்கு அருகிலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்ட இவரது இறுதி தருணங்கள் கூட இவருக்கான நியாயத்தை பலவீனப்படுத்தும் வகையில் எண்ணற்ற எதிர்மறையான அனுமானங்கள் அமைந்துவிட்டது.
பூலான் தேவியின் கிராமத்து மக்கள் வைக்கும் உணர்ச்சிமயமான ஒரே கோஷம் என்னவென்றால், உயர் சாதியிடமிருந்து பூலான் தேவி எங்களைக் காக்கும் கேடயமாக இருந்து போராடினாள் என்பதுதான்!
இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் ஜெகாதா தன்னுடைய முன்னுரையில் கூறியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.