Skip to content

இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா

130.00

ஆசிரியர் :ஜெகதா

மனசாட்சி உயிர்த்தெழுந்த மணிப்பூரின் அடையாளம் ஐரோம் ஷர்மிளா .

மணிப்பூர் யுத்த பூமியின் போர்க்களக்

கொற்றவையாகப் பேசப்படும் போராளியின் தனிமனிதப் போராட்டம் இந்திய வரலாற்றில் இதிகாச தன்மை மிக்கதாகிவிட்டது.

உலகம் இதுவரை சந்தித்திராத உண்ணாவிரதப் போராளியாக ‘எனது உடல் எனது ஆயுதம்’ என்று கூறி 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக உண்ணாநிலைப் போராட்டம் மூலமாக இந்தியாவைக் கலங்கடித்து இருக்கிறார் இந்த மணிப்பூர் மங்கை.

மணிப்பூரில் நடந்த ராணுவ வன்முறைகளுக்கும், கற்பழிப்பு கொடுமைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள் ) சட்டம் 1958 ( ASFPA)வை இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000 ஆம் ஆண்டு  நவம்பர் 2 லிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை இந்த இரும்பு மங்கை தொடர்ந்து வந்தார்.

16 ஆண்டுகளாக மூக்கில் மாட்டப்பட்ட டியூப் இவரது உடல் உறுப்பு போல அவரிடமிருந்து பிரிக்க முடியாத போராயுதம் ஆகிவிட்டது.

இந்த இரும்பு மனுசஷியின்  மிக நீண்டகாலத் தொடர் போராட்டத்தை தேசிய ஊடகங்கள் இறுகக் கண்களை கட்டிக்கொண்டு முக்கியத்துவம் கொடுக்காது சோரம் போனது அரசியல் நிர்ப்பந்தம் தான் காரணமா?

ஒழுக்கக் கேடுகளும் வன்முறை நெருக்கடி நெருக்கடிகளும்  ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட துயரம் மிகுந்த ஒரு சமூகத்தின் மாற்றத்திற்கான போரினை ஒரு தனி மனுஷியாக இந்த யுகத்தில் கையில் எடுத்து தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த வீரப்புதல்வியின் வீர வரலாறுதான் இந்நூல்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா”

Your email address will not be published. Required fields are marked *