உலக பயங்கரவாத இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக, தோற்றுப்போன துப்பாக்கிக்குண்டாக, மறுபிறவி எடுத்து இன்று சிலிர்த்து எழுந்து நிற்கிறாள் பாகிஸ்தானின் சின்னப் பெண் மலாலா யூசுஃப்ஸை!
மதத்தின் பெயரால் மகளிருக்கு கல்வி மறுக்கப்படுவது சம்பந்தமாக சாதாரணமாக ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்த மாணவி மலாலாவின் எழுத்துக்கள் தீவிரவாத ஆயுதங்களின் ஆணிவேரைப் பற்றி ஆட்டின..
அதுவே சாதாரண மலாலாவை அசாதாரண மலாலாவாக உலக அரங்கின் முன் நிறுத்தியுள்ளது.
பழிவாங்கத் துடித்த பாதகர்கள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்கள். தாலிபான் வரலாற்றில் நேருக்கு நேராக நின்று மூன்று மாணவிகளை சுட்டும் மூன்று மாணவிகளும் இன்று உயிருடன் மீண்டு இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை.
பெண்கல்வியின் குடுமியைப் பற்றி எரிக்கத் துணிந்த தாலிபான்களின் குரல்வளையை நெறித்த சிறிய பெண் மலாலாவின் துணிச்சல் 16 வயதில் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெறும் மேடைக்கு கொண்டு போய் நிறுத்தியது.
பெண்ணடிமைத்தனத்தை மண்மூடிப் போக செய்யவும், பெண் கல்வியைப் பறிக்க என்னும் பாதக தாலிபான்களின் கோரப் பற்களை பிடுங்கி எறியவும், பாகிஸ்தான் பிரதமராக தான் ஆக வேண்டும் என்ற இலட்சியத் தீ இந்தச் சிறுமி மலாலாவுக்கு இன்று விஸ்வரூபமாக எழுந்திருக்கிறது!
பெண் கல்விப் போராளி மலாலா வியப்பூட்டும் வரலாறு உலகின் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் வாசித்து அறிய வேண்டிய வரலாறு என்பதில் வியப்பேதும் இல்லை
இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் ஜெகாதா தமது முன்னுரையில் எழுதி இருக்கிறார்.
Reviews
There are no reviews yet.