இஸ்லாமிய வரலாற்றுச் சுரங்கத்தில் நுழைந்த நான் அதில் எத்தனை எத்தனையோ அருமையான நவமணிகள் எல்லாம் குவிந்து கிடப்பதைக் கண்டு உண்மையிலேயே பிரமிப்படைந்துவிட்டேன். அவற்றில் எவற்றை அள்ளுவது, எவற்றை தள்ளுவது என்பதை அறியாது என் அறிவுக் கண்களுக்கு இனிமையாகத் தோன்றிய சில பெருமணிகளைப் பொறுக்கி எடுத்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இவற்றில் ஒவ்வொன்றும் வானவில்லின் பல்வேறு நிறங்கள் போன்று ஒளிர்வதை நீங்கள் காணலாம்.
ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள் அவனின் வாழ்வு, தன்மை, தகுதி, அனைத்தையுமே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. எனவே ஒருவனின் வரலாறு முழுவதையும் படிப்பதற்கு முன் அவன் வாழ்வில் அங்கும் இங்கும் பளிச்சிடும் சில இனிய நிகழ்ச்சிகளைப் படித்தாலே அவனுடைய வாழ்க்கை முழுவதையும் படித்ததைப் போன்ற உணர்வைப் பெறுகிறோம்.
இதேபோன்று இஸ்லாமியர்களின் வாழ்வில் நடந்த இனிய நிகழ்ச்சிகள் சிலவற்றை தொகுத்து ‘இஸ்லாமிய வரலாற்றில் இனிய நிகழ்ச்சிகள் ‘என்ற தலைப்பில் தந்திருக்கிறார் நூலாசிரியர் பாத்திமா ஷாஜஹான்.
Reviews
There are no reviews yet.