இறைவனுடைய திருத்தூதருக்கு இனிய துணைவியாக அமைந்த கதீஜா அம்மையாரின் இச்சிறிய வாழ்க்கை வரலாறு நமது சகோதரிகளுக்கு பயன்படும் என்று எழுதப்பட்டது. இந்த அம்மையார் இல்லறத்தின் நன் மனையாள். குழந்தைகளைப் பராமரிக்கும் நல்லதாய். கணவருக்காக தனது செல்வங்களை அர்ப்பணம் செய்தவர். கணவர் மீது முழு நம்பிக்கை உள்ளவர். இறை நெறியில் மன உறுதியுடன் நிற்பவர். அர்ப்பண வாழ்க்கைக்கு அரிய எடுத்துக்காட்டு. வழித்தோன்றல்கள் ஆகிய நமக்கெல்லாம்- சிறப்பாகப் பெண் உலகினுக்கு சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.
”எல்லோரும் இறைவனை நிராகரித்தபொழுது, கதீஜாவே முஸ்லிமாகி, என்மீது நம்பிக்கை கொண்டார். எல்லோரும் என்னைப் பொய்யன் என கூறியபொழுது, கதீஜாவே என்னை மெய்யன்னென்று உறுதியாக நம்பி விசுவாசம் கொண்டார். தம்மிடமிருந்த செல்வம் அனைத்தையும் இஸ்லாத்திற்காக அர்ப்பணம் செய்தார்” என்று நபி பெருமானார்(ஸல்) அவர்கள் அடிக்கடி அம்மையாரை மீண்டும் மீண்டும் நினைத்து நினைத்துச் சொல்வார்கள்
இவ்வாறு இந் நூலின் ஆசிரியர் சையத் இப்ராகிம் அவர்கள் தமது முன்னுரையில் கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.