Skip to content

Showing 1–12 of 48 results

எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் எழுதிய தன்னம்பிக்கை நூல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை. முதல் நூல் “வாழ்க்கையில் வெற்றி” 1948இல் வெளி வந்தது. 1948 முதல் 1963 வரை 31 தன்னம்பிக்கை நூல்களை எழுதியுள்ளார். 31 நூல்களும் 31 விதமானவை ஆனால் சுயமுன்னேற்ற நூல் தான். சுயமுன்னேற்ற நூல்களை தமிழில் முதன் முதலாக 1948லேயே எழுதியவர் இவர்தான். இவருக்கு பிறகுதான் தமிழ்வாணன்¸ M.S..உதயமூர்த்தி¸ மெர்வின் போன்றோர் எழுதினர். இவர்கள் மட்டுமல்ல தற்பொழுது சுயமுன்னேற்ற நூல்கள் எழுதிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கூறுவது “ எங்களுக்கு முன்னோடி அப்துற்-றஹீம் அவர்கள் தான்” என்பதாகும்.